தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு தமிழக அரசு விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ள இடங்களில் எந்த தளர்வுகளும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொடர்பான அரசின் விளக்க அறிக்கையில், நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு,சிகப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் சென்னை மாநகருக்கு அதிக தளர்வுகள் அளிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Comments