60 க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மாற்றம்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 க்கும் மேற்பட்டோர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட, தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
முன்னதாக ஸ்டான்லி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில், கொரோனா வார்டுகளில், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில், 80 படுக்கைகளுடன் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Comments