சென்னையில் வீடு தேடி வந்து குறைந்த விலைக்கு காய்கறி விற்பனை செய்யும் சிறு வண்டிகள்
சென்னையில் மொத்தமாக காய்கறி விற்பனை செய்யப்படும் சந்தைகளை விட, சிறு சிறு வண்டிகளில் வீதி வீதியாக வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகள் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா அச்சுறுத்தலால் வாகனங்கள் சென்று வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தற்காலிக சந்தை பகுதிகளில் இரண்டு மடங்கு அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், சந்தைகளில் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படும் பீன்ஸ் சிறு வண்டிகளில் 80 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கேரட் 40 ரூபாய்க்கும், வெங்காயம் தக்காளி தலா 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments