சென்னையில் கொரோனா பரவலால் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது, முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தொடர்பினை விரைவாக கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Chaired the meeting along with Hon'ble Ministers D Jayakumar and Dr. C Vijayabaskar to discuss the #COVID19 control and preventive measures being undertaken in @chennaicorp with the Special Nodal Officer for #Chennai and other officers at Amma Maligai in Ripon Building today. pic.twitter.com/HDTA1Jwvd5
— SP Velumani (@SPVelumanicbe) May 2, 2020
Comments