சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறப்பு - தமிழக அரசு
சென்னை மாநகரில், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, கடைகளை திறந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 3 மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.
இதன்படி, கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் .
உணவகங்களை பொறுத்தவரை, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதிக்கப்படும். கட்டு மான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந் தால், அக் கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக் கப்படும் என தெரிவித்துள்ளார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்தது 20 ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக் கப்படும். முடிதிருத் தகங்கள், அழகு நிலையங்கள் தவிர,ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப்பொருட் கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருள், மின் மோட் டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனி கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக் கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன்பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் , வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் அனுமதி பெற்று பணி புரிய அனுமதிக்கப் படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments