உயரும் கொரோனா பாதிப்பு... திணறும் மாநிலங்கள்... தவிக்கும் மக்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 37 ஆயிரத்து 500 - ஐ நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றால் பலி ஆனோர் எண்ணிக்கை ஆயிரத்து 221 ஆக உயர, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங் களின் எண்ணிக்கை 9 என்ற நிலையில், வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன.
அந்த வகையில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்து 500 ஐ கடந்து விட்டது. அங்கு மட்டும் வைரஸ் தொற்றுக்கு 485 பேர், இரை ஆகி உள்ளனர்.
குஜராத்தில் 4 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட, அங்கு 236 பேர் பலி ஆகி விட்டனர்.
டெல்லியை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 700 ஐ தாண்ட, உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரத்து 700 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள சூழலில், பலி எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 720 ஆக பாதிப்பு உயர, உயிரிழப்பு 65 ஆக கூடியது.
உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 300 ஐ எட்டி விட, ஆந்திராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 500 -ஐ
தாண்டியது.
தெலுங்கானாவிலும் கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை தாண்டி விட்டது.
மேற்கு வங்காளத்தில் பாதிப்பு 800 - ஐ நெருங்க, ஜம்மு- காஷ்மீரில் 639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் 598 பேரும், கேரளாவில் 497 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட, பஞ்சாப், பீஹார், ஹரியானா மாநிலங்களிலும் வைரஸ் தொற்றின் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஆக மொத்தம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 293 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 465 ஆக உயர்ந்தது. இதேபோல, ஒரே நாளில் 71 பேர் பலி ஆனதால்
உயிரிழப்பு ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.
Comments