கொரோனாவிலிருந்து 100 சதவீதம் மீண்ட திரிபுராவில் மீண்டும் கொரோனா
கொரோனா பாதிப்பில்லிருந்து 100 சதவீதம் மீண்ட திரிபுராவில் மீண்டும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் முதலில் கொரோனா பாதித்து 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சையில் 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக திரிபுரா அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரிபுராவின் அம்பாசா பகுதியில், உள்ள எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு மாநிலங்களின் பட்டியலில் திரிபுரா மீண்டும் சேர்ந்துள்ளது. திரிபுரா முதலமைச்சர் விப்லப் குமார் தேவ் (biplab kumar deb) ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Alert!
— Biplab Kumar Deb (@BjpBiplab) May 2, 2020
In Tripura two persons from Ambassa #BSF unit found #COVID19 positive.
Total #COVID19 positive cases in Tripura stands at 4. (Two already discharged, so active hospital cases : 2)
Update at 02:30 pm / 2nd May#TripuraCOVID19Count
Comments