அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் காலமானார்

0 5119
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் காலமானார், அவருக்கு வயது 67.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் காலமானார், அவருக்கு வயது 67.

வனத்துறை அமைச்சரும் அதிமுக கழக அமைப்புச் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள், மென்டோசா காலணியில் உள்ள தனது மகன் வெங்கடேசன் வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.

அவர் மரணமடைந்த தகவல் சனிக்கிழமை சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் சீனிவாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் புறப்பட்டார்.

கண்ணாத்தாள் அவர்களின் உடல் மெண்டோசா காலணியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கண்ணாத்தாளை இழந்து வாடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments