கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி பயணித்த 18 பேர் மீது வழக்குப்பதிவு

0 18085

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப் பிரதேசம் சென்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரிட் கலவை இயந்திர வாகனத்தை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 18 பேர் பதுங்கியநிலையில் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோ நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 18 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்றதற்காக வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments