சென்னையில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்
சென்னையில் தங்கியுள்ள வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, வேளச்சேரி, கிண்டி, முகப்பேர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்கி கூலி வேலை பார்த்து வரும் நிலையில், ஊரடங்கால் வேலையிழந்துள்ள அவர்கள் பாதிக்கப்படாத வகையில், தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் ஒரு மாதத்தை கடந்தும் ஊரடங்கு நீடிப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Comments