கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக இருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கரூர் அருகே 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றி கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாக 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சின்னவரப்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், சென்னை ராயபுரத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 24ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய அவரை தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தடையை மீறி வெள்ளியணை பகுதியில் 108 ஆம்புலன்சில் பணியாற்றி வந்த அரவிந்துக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தாய், தந்தை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 130 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், 144 தடை உத்தரவை மீறி வெளியேறி தொற்று நோயை பரப்பியதாக அரவிந்த் மீது 4 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் திருநாவுக்கரசு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments