அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் - மு.க.ஸ்டாலின்
அரிசி ரேசன் அட்டைதாரர்களின் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காவல்துறையினர், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, மின் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன், கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும், #Corona தடுப்பில் களப்பணியாற்றும்அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) May 2, 2020
மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.
ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை; அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. pic.twitter.com/2sFi6WmA4d
Comments