பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் இந்தியவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

0 1820

ஜம்மு காஷ்மீரில் ராம்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலில் காயமடைந்த 3 ஜவான்களில் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் எந்த காரணமும் இன்றி ராம்பூரில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி கொடுத்தாலும் நமது தரப்பில் 3 ஜவான்களுக்கு காயம் ஏற்பட்டது. முன்னதாக ஊரி மாவட்டம் ஹாஜிபூர் பிரிவில் இருக்கும் கட்டுப்பாட்டு எல்லையில் நேற்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. எதிரிப்படைகளுக்கு இந்திய ராணுவம் கொடுத்த தக்க பதிலடி கொடுத்தது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments