நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக அறிவிப்பு
நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா சிவப்பு மண்டல பகுதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகள் சிவப்பு மண்டலமாக அடையாளம் காணப்படுகின்றன. இதன்படி நாடு முழுவதும் முன்பு 170 மாவட்டங்கள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 92 மாவட்டங்களை நீக்கிவிட்டு, புதிதாக 52 மாவட்டங்களை மத்திய அரசு சேர்த்துள்ளது.
இந்த 130 மாவட்டங்களும், 22 மாநிலங்கள், யூனியன் பிரதேச பகுதிகளில் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையான 40 கோடி பேர் வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இந்த மாவட்டங்களில் நாட்டின் முக்கிய பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களும் அடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments