டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய கிரிக்கெட் அணி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 4 ஆண்டுகளுக்குப் பின் முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விளையாடிய 100 சதவீத போட்டிகள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் 50 சதவீத போட்டிகளை கணக்கீடாக வைத்து இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 26 போட்டிகளில் 3ஆயிரத்து 028 புள்ளிகளுடன் 116 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
நியூஸிலாந்து அணி 21 போட்டிகளில் 115 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 27 போட்டிகளில் 3 ஆயிரத்து 085 புள்ளிகளுடன் 114ரேட்டிங் புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
Comments