காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு
காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே காஷ்மீரில்தான் குங்குமப்பூ அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்ரீநகருக்கு கிழக்கே உள்ள பாம்பூர், அனந்த்நாக் உள்ளிட்ட இடங்களில் இதனை உற்பத்தி செய்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
உணவுக்கு சுவையூட்டி, வண்ணம் கொடுத்து, நறுமணம் கொடுக்கும், மருத்துவ குணமுடைய காஷ்மீர் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் இதனை வர்த்தகம் செய்ய முடியும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Comments