மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்... அடுத்த வாரத்தில் அறிவிக்க முடிவு...

0 2142

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த வாரத்தில் முடிவெடுக்க உள்ளது.

மாநிலங்களவையில் மொத்தம் 55 உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் காலியாக இருந்த 9 மேலவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன் மூலம், எஞ்சியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் காலியிடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரத்தில் அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments