மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்க முடிவு
கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான 40 ஆயிரம் வென்டிலேட்டர்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மருந்தகத்துறைச் செயலாளர் பி.டி. வகேலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொரோனாவை எதிர்கொள்வதற்காக 19 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போது ஆயிரம் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் என்றும், மீதமுள்ளவை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசின் பெல் நிறுவனம், மாருதி சுஸூகி மற்றும் ஆந்திராவில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வகேலா தெரிவித்துள்ளார்.
Comments