ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியத்தை அடைந்த வாகன விற்பனை
நாடு தழுவிய ஊரடங்கால் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை முழுவதுமாக சரிந்து, ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை பூஜ்ஜியத்தை அடைந்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால், பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும்.
இதுதொடர்பாக பேசியுள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள், மே 4-க்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், உற்பத்தி இழப்பு மட்டுமின்றி சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையை இழக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 2020-2021ம் நிதியாண்டின் முதல் மாதமே விற்பனையில் சரிவை சந்தித்து இருப்பது, வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Comments