விமானப் போக்குவரத்துத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

0 1311

வருவாய் மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஒப்பந்த அடிப்படையில் மேலும் 6 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை, விரைவுபடுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

விமான போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா வான்வெளி எல்லையை திறம்பட பயன்படுத்தி பறக்கும் நேரத்தை குறைப்பதன் மூலம், செலவீனங்களை குறைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments