சமூக விலகலை கடுமையாகப் பின்பற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

0 1291

சென்னையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கப் பொது இடங்களில் சமூக விலகலையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடுமையாகப் பின்பற்ற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தால் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது ஒருமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும், பணியிடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோருக்கு நூறு ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments