அமெரிக்காவில் உயிரிழப்பை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்துவோம் -அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் உலகளவில் 15 லட்சம் முதல் 22 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படும் என்று கணிப்புகள் வெளியானதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது மிகவும் கொடுமையான எண்ணிக்கை என்று தெரிவித்த டிரம்ப் இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும் ஆனால் அப்படி நடக்கவில்லை என்றும் சாடினார்.
அமெரிக்காவில் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 64 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்காக அமெரிக்கா கடைகளையும் உணவகங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளையும் இயங்க அனுமதியளித்துள்ளது.
— Donald J. Trump (@realDonaldTrump) May 1, 2020
Comments