டெல்லி வன்முறை : போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

0 2120

டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தன. இந்தக் கலவரத்தின்போது, இளைஞன் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

இதையடுத்து, போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் பதுங்கி இருந்த ஷாரூக் பதான் அவனுக்கு உதவி செய்த கலீம் அகமது மற்றும் இஸ்தியாக் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மூவர் மீதும் டெல்லி போலீசார் நேற்று 350 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments