டெல்லியில் மேலும் 12 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா உறுதி
டெல்லியில் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் முகாமிட்டிருக்கும் 31வது பாட்டலியன் பிரிவைச் சேர்ந்த சி ஆர் பி எஃப் வீரர்கள் 52 பேருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 12 வீரர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் 31வது பட்டாலியன் பிரிவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கும் தொற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்ட வீரர்களில் அசாமைச் சேர்ந்த ஒருவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Comments