காவிரி விவகாரம் : திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

0 3157
காவிரி விவகாரத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களது சுய நலனுக் காக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக திமுக மீது, மீன்வளம் மற்றும் நிர்வாக பணி யாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றஞ் சாட்டி உள்ளார்.

ஜல் சக்தி துறை யுடன் காவிரி மேலாண்மை ஆணையம் இணைக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க் கட்சி துணை தலைவர் துரைமுருகன் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளித்து வெளி யிட் டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளதாக கூறுவது தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்தன்னாட்சி, எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என அந்த அமைச்சகத்தின் செயலாளர் யூ.பி. சிங் வெளி யிட் டிருந்த கருத்தை, அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.

காவிரி விவ காரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்தது திமுக தான் என அவர் விமர்சித்துள்ளார். 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சியில் ஜல்சக்தித்துறை தலையிட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments