21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக குறைத்த பின்னரும், கொரானா தாக்கத்தால் தேவை குறைந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 26 டாலராக வீழ்ச்சி அடைந்தது.
குளோபல் பெஞ்ச்மார்க்கான பிரென்ட் கச்சா எண்ணையின் விலை 60 சதவிகிதம் வீழ்ந்து கடந்த 21 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும், ரஷ்யாவும் சேர்ந்து தினசரி உற்பத்தியில் 97 லட்சம் பேரல்களை குறைக்க முடிவு செய்து அது வெள்ளி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் விளைவாக இன்னும் 2 வாரங்களில் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையேயான இடைவெளி பாதியாக குறைந்து, கச்சா எண்ணெய் விலை ஓரளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments