கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ நடமாடும் தாய், சேய் மருத்துவ வாகனம்

0 3183
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று மருத்துவ உதவிகள் வழங்கும் ”தொற்றாநோய் சிறப்பு மருத்துவக் குழு” வாகனங்களை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

ஊரடங்கு காரணமாக இதுபோன்றவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைப் போக்க, தமிழக அரசு சார்பில் அங்குள்ள 13 வட்டாரங்களுக்கும் 13  சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் உள்ளிட்டோரும் நடமாடும் இந்த மினி ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மாத்திரை மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments