கொரோனாவால் கடும் பாதிப்புக்கு உள்ளான இந்திய திரையுலகம்

0 6120
கொரோனாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள பாலிவுட் திரையுலகம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள பாலிவுட் திரையுலகம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தது முதல் பாலிவுட், கோலிவுட் என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன.

இதனால் பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்கள் நின்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஊரடங்கு விலக்கப்பட்டாலும் திரையரங்குகளுக்கு ஓரளவு ஆட்கள் வர ஆகஸ்ட் வரை ஆகும்  என துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். ரசிகர்களை ஈர்க்க கட்டணக் குறைப்பு நடத்த வேண்டி வரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதுடன்  போன மாதம் வரை எந்த புதிய படமும் வெளியாகாததால் ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்ட்டிபிளக்ஸ் நிறுவனங்களுக்கு பிப்ரவரி மாத இறுதியில் 40 சதவிகித வருமானம் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments