உயிர் கொல்லி கொரோனா இரையான உலக நாடுகள்

0 2516
உலகெங்கிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 25 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 25 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

உயிர் கொல்லி கொரோனா நோய்க்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் கிடு கிடுவென அதிகரித்தபடி உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளிலும் சுமார் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை எடுக்கும் நிலையில், அவர்களில் சுமார் 51 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளன.

இதுதவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோயிலிருந்து சிகிச்சைக்கு பின் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2 முதல் 5 வரையிலான இடங்களையும் வகிக்கின்றன.

அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளதோடு, சுமார் 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், பிரிட்டனில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments