நாடே ஊரடங்கில் இருக்கும் போது தனக்கு மட்டும் டியூஷனா? ஆசிரியை, அப்பா, அம்மாவை கைது செய்ய போலீசை அழைத்து வந்த சிறுவன்

0 28965
நாடே ஊரடங்கில் இருக்கும் போது தன்னை மட்டும் டியூஷனுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், பெற்றோர் மற்றும் ஆசிரியையை கைது செய்யுமாறும் கோரி 5 வயதுச் சிறுவன் காவல்துறையினரை அழைத்து வந்த ருசிகர சம்பவம் பஞ்சாப் மாநிலம் படாலா நகரில் அரங்கேறியுள்ளது.

அழுகையும் ஆத்திரமுமாக டியூஷனுக்குச் சென்று வந்த பொடியன் ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்து காவல் நிலையத்துக்குள் படையெடுத்தான்.

சிறுவனின் புகாரை ஏற்று அவனுடன் சென்ற படாலா டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறையினர் ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என டியூஷன் ஆசிரியைக்கு அறிவுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சிறுவனின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவனது பெற்றோரையும் அறிவுறுத்தி சிறுவனை வீட்டில் விட்டுச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments