எஸ் வங்கி நிதி மோசடி வழக்கில் வாத்வான் சகோதர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
எஸ் வங்கி நிதி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களை வரும் எட்டாம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டிஎச்எப்எல் நிறுவனத்தில் எஸ் வங்கி மூவாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் கடன்பத்திரமாக முதலீடு செய்தது. இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், இதற்குக் கைம்மாறாக எஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் மகள் நிறுவனத்துக்கு டிஎச்எப்எல் 600 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக டிஎச்எப்எல் நிறுவனர்கள் கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இருவரையும் ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மே ஒன்றாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரையும் மேலும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் எட்டாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
Comments