கொரோனா நோய் பரவல் 2022ம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும் : ஆய்வு அறிக்கை
கொரோனா நோய் பரவல் 2022ம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும் என ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைகழக தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்மை மைய நிபுணர்கள் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அலை அலையாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
உலக மொத்த மக்கள் தொகையில் 3இல் 2 பங்கு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வரை அந்நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அறிகுறியும் இல்லாமல் மக்களிடையே பரவும் தன்மை கொரோனாவுக்கு இருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள், குளிர்காய்ச்சலை (influenza) கட்டுபடுத்தியதை காட்டிலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனவும் கூறியுள்ளனர்.
Comments