வருகிற 3ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்க அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கை தாக்கல்
மே 3ஆம் தேதிக்குப் பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
கடந்த மார்ச் 24ஆம் தொடங்கி, வரும் 3ஆம் தேதி வரை, மாநிலம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, முதலமைச்சர் உத்தரவின் பேரில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தனது இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் கிருஷ்ணன், அதுல்ய மிஸ்ரா, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.
இடைக்கால அறிக்கையின் மீது முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் நிபந்தனைகளோடு தொழிற்சாலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க நான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 1, 2020
Comments