கடந்த இரு மாதங்களாகச் செய்தித்தாள் ஊடகங்களுக்கு 4500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்
செய்தித்தாள் ஊடகங்களுக்கு 15ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளதால் ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியச் செய்தித்தாள்கள் சங்கத் தலைவர் சைலேஷ் குப்தா மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கடந்த இரு மாதங்களாகச் செய்தித்தாள் ஊடகங்களுக்கு நாலாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 7 மாதங்களில் கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் செய்தி அச்சிடும் தாள்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும், 2 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
விளம்பரக் கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்றும், கட்டண நிலுவைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சைலேஷ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
Comments