கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள்
குறைந்த அளவு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திறக்கப்பட்டுள்ள 2 ஓட்டல்களில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பணிவிடைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதில் “பெப்பர்” எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டலுக்கு வருகை தந்த டோக்கியோ ஆளுநர் யுரிக்கோ கொய்க்கியை ( Yuriko Koike )இந்த பெப்பர் ரோபோ வரவேற்று அசத்தியது.
செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மற்றொரு ரோபோ, கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்கிறது.
ஸ்மார்ட்போன் மூலம் நோயாளிகளின் உடல் வெப்பநிலையை நாளொன்றுக்கு இருமுறை பரிசோதனை செய்யும் பணியையும் இந்த ரோபோட்டுகள் செய்கின்றன.
Comments