உலகப் பணக்காரர்களில் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடம்
அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் உலகின் முதல் பெரும் பணக்காரராகத் திகழ்கிறார்.
புளூம்பெர்க் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலையும் அவர்களின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். எல்விஎம்எச் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாமிடத்தில் உள்ளார். பேஸ்புக் தலைவர் மார்க் சுக்கர்பர்க் 5 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காமிடத்தில் உள்ளார். பெர்க்சயர் ஹேத்தவே தலைவர் வாரன் பப்பெட் 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாமிடத்தில் உள்ளார்.
Comments