மகாராஷ்டிரா : வரும் 21 ஆம் தேதி சட்ட மேலவைத் தேர்தல்

0 2386

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் கடும் பிரயத்ன முயற்சிக்குப் பிறகு சட்ட மேலவைத் தேர்தலை இந்த மாதம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சட்டமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 27 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். வரும் 26 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு அவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

கொரோனா எதிரொலியாக சட்டமேலவையின் 9 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ள நிலையில் நியமன எம்.எல்.சி ஆகும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. இதை அடுத்து பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமது பதவிக்கு ஆபத்து இருப்பதை சுட்டி காட்டிய நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments