டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 14 பேர் மீது குண்டாஸ்

0 2426

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 14 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த, சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த  டாக்டர் சைமனின் உடலை, அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட, ஒரு பெண் உள்ளிட்ட 14 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டமும் இயற்றியுள்ளது.  இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், 14 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments