35 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு... இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா

0 4868

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 3ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனா பலி எண்ணிக்கையும் ஆயிரத்து 147ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் ஏறத்தாழ பாதிபேர் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி, 10 ஆயிரத்து 498ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி, 4 ஆயிரத்து 395ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 515ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 25 ஆயிரத்து 7 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிறகு 8 ஆயிரத்து 889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 773 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments