ஜூன் முதல்தேதியில் இருந்து விமான முன்பதிவு

0 4374

விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பு வரும் வரை முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், அதற்கு மாறாக ஜூன் முதல் தேதியில் இருந்து விமான டிக்கட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிறுவனங்களும் டிக்கட் முன்பதிவு செய்யும் ஏஜன்ட்டுகளும் ஜூன் முதல் தேதியில் இருந்து முன்பதிவை தொடங்கியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மே 4ம் தேதி விமான சேவை தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணம் வரவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 4ம் தேதி விமான சேவைகள் தொடங்காது என்றும் விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் இமெயில் மூலம் தெரிவித்துள்ளன.

விமான சேவை தொடங்கும் போது கட்டணத்துக்கு நிகரான முன்பதிவை செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது மீண்டும் அங்கீகரிக்கப்படாத முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து சேவை தொடங்காவிட்டால், பயணிகளுக்கு பணம் திருப்பித் தரப்படாத நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments