சென்னையில் கொரோனா தொற்றால் 29 குழந்தைகள் பாதிப்பு

0 1901

சென்னையில் கொரோனா தொற்றால் 29 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 பேரும் 10முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 196 பேரும், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் 160பேரும், 50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் 71 பேரும், 70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் 27 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30முதல் 39 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments