"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை நீக்கியது ஏன்? வெள்ளை மாளிகை விளக்கம்..
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை நீக்கியது ஏன் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ஃபாலோ செய்து வந்த வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென பின்தொடர்தலை துண்டித்தது.
இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள் என்றும் பிறகு அன் பாலோ செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments