மகாராஷ்ட்ராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10, 490 ஆக அதிகரிப்பு

0 1328

மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

இதில் மும்பையில் மட்டும் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிக பாதிப்புள்ள நகரமாக மும்பை விளங்குகிறது. மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் 450 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் 290 பேர் உயிரிழந்தனர். இரண்டாவதாக புனேயிலும் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேயில் மட்டும் 80 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களுடன் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments