Hotspot மாவட்டங்களின் எண்ணிக்கை 170ல் இருந்து 129ஆக குறைவு
நாட்டில் கொரோனா வைரசிஸ் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை, 170ல் இருந்து 129 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும் மிதமான பாதிப்பு உள்ள 207 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலமாகவும் நோய் தொற்றே இல்லாத 325 மாவட்டங்கள் பசுமை மண்டலமாகவும் கடந்த 15 ஆம் தேதி வகைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதிய புள்ளிவிவரப்படி ஹாட்ஸ்பாட் என்ற அழைக்கப்படும் சிவப்பு மண்டல மாவட்டங்களின் எண்ணிக்கை 15 நாட்களில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆரஞ்சு நிற மாவட்டங்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்து, கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் 307 ஆக குறைந்துள்ளது.
ஐதராபாத், புனே, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளதென்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
Comments