ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1403 ஆக உயர்வு
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நானூற்றைத் தாண்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 321 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
31 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் உயிரிழக்கவில்லை. ஆயிரத்து 51 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 386 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 287 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 246 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
71 new positive cases reported in Andhra Pradesh in last 24 hours. Total number of #COVID19 positive cases in the state stands at 1403, including 1051 active cases, 31 deaths & 321 discharges. No death reported in last 24 hours: State Command Control Room, Andhra Pradesh pic.twitter.com/jAZPuhsJCU
— ANI (@ANI) April 30, 2020
Comments