பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்
பால்டிக் கடலின் சர்வதேச எல்லைக்குட்பட்ட வான்பரப்பில், அணுஆயுத தாக்குதல் நடத்தும் திறன்படைத்த ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்ததால், அவற்றை ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஜெட் விமானங்கள் சூழ்ந்து பறந்தன.
ஆர்க்டிக், அண்டார்டிக், பசிபிக், பால்டிக் மற்றும் கருங்கடல் வான்பரப்புகளில் ரஷ்ய விமானங்கள் பயிற்சிக்காக பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், அணுஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன்படைத்த, குண்டு வீசித் தாக்கும் Tu-160 விமானங்கள் பால்டிக் கடல்பரப்பில் பயிற்சிக்காக பறந்துள்ளன.
8 மணி நேரம் வானில் பறந்தபோது, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஜெட் விமானங்கள், ரஷ்ய விமானங்களை சூழ்ந்து பறந்துள்ளன. ஆனால் தாங்கள் எவ்விதத்திலும் சர்வதேச வான்பரப்பு விதிகளை மீறவில்லை என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மாற்று நாட்டு விமானங்களால் வான்பரப்பில் அச்சுறுத்தல் என்று கருதும்போது, இதுபோல விமானங்கள் சூழ்ந்து பறந்து விரட்டியடிப்பது வழக்கமாகும்.
Comments