ஊரடங்கின் அடுத்தகட்ட அறிவிப்பை தாமதிக்காமல் அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 6899
ஊரடங்கு: அடுத்தகட்ட அறிவிப்பை தாமதிக்காமல் அறிவிக்க வலியுறுத்தல்

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமை என அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments