பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்

0 8875
மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்.

மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்.

அவருக்கு வயது 67. நியூயார்க் மருத்துவமனையிலும், டெல்லி மருத்துவமனையிலும் ஏற்கெனவே புற்றுநோய் மற்றும் வைரல் காய்ச்சலுக்கு ரிஷி கபூர் சிகிச்சை எடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று மூச்சு விடுதலில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை காலமானார்.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ரிசி கபூரின் மரணம் தம்மை சிதறடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கபூரின் மரணத்தால் தமது இதயம் நொறுங்கிவிட்டதாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY