மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினராக உதவும்படி முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமரிடம் கோரிக்கை
மகாராஷ்டிர மாநில சட்ட மேலவை உறுப்பினராக உதவும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர முதலமைச்சரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, எம்எல்ஏவாக இல்லை என்பதால், அவரை ஆளுநரிடம் இருக்கும் இடஒதுக்கீட்டின்கீழ் சட்டமேலவை உறுப்பினராக நியமிக்க ஆளுநர் பகத்சிங் கோசியாரியை மாநில அமைச்சரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் ஆளுநர் ஆலோசனை கேட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் நேற்று உத்தவ் தொடர்பு கொண்டு பேசினார். இந்தத் தகவலை தெரிவித்துள்ள மாநில அமைச்சரான தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லையெனில் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய போவதாக பிரதமரிடம் உத்தவ் கூறியதாக குறிப்பிட்டார்.
Comments