இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி...!

0 4362
திக் திக் கொரோனா பாதிப்பு, பலி மேலும் அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 718 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா நோயின் பாதிப்பு நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் மத்திய சுகாதார அமைச்சக துறை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 718 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 67 பேர் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டி, 33 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கையும் ஆயிரத்து 74ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி, 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குஜராத்தில் 4 ஆயிரத்து 82ஆகவும், டெல்லியில் 3 ஆயிரத்து 439ஆகவும் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது 

நாடு முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் 23 ஆயிரத்து 651 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதேபோல் மருத்துவ சிகிச்சையில் இதுவரை 8 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments